இங்கிலாந்து முன்னணி நிறுவனத்துடன் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் ஆலோசனை

இங்கிலாந்து முன்னணி நிறுவனத்துடன் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர்.

Update: 2023-12-07 11:15 GMT

இங்கிலாந்து முன்னணி நிறுவனத்துடன் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர். 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

இங்கிலாந்து முன்னணி நிறுவனத்துடன் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தினர் ஆலோசனை நடத்தினர்.

இங்கிலாந்து நாட்டின் முன்னணி ஆயத்த ஆடை வர்த்தக நிறுவனமாக பிரைமார்க் நிறுவனத்தை சேர்ந்த பிரதிநிதிகள் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து  ஆலோசனை நடத்தினார்கள். பிரைமார்க் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 800-க்கும் மேற்பட்ட ஆயத்த ஆடை சில்லறை விற்பனை மையங்களை அமைத்துள்ளன. 34 ஆண்டுகளாக திருப்பூரில் பின்னலாடை வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளனர். தற்போது திருப்பூரில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.

பிரைமார்க் நிறுவனத்தின் வளம் குன்றா வளர்ச்சி கோட்பாட்டை கண்காணிக்கும் இயக்குனர் பீஓங் தலைமையில் ஜோனா வில்லியம்சன், அபி ரஷ்டன், ருத்மார்ட்டின் மற்றும் 10-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் குழுவினர் வந்தனர். திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் குழுவினரை வரவேற்று பேசினார். துணை தலைவர் இளங்கோவன், திருப்பூர் தொழில் வர்த்தக கூட்டமைப்பு தொடங்கப்பட்டதன் நோக்கம் குறித்து விளக்கி கூறினார். இணை செயலாளர் குமார், வளம் குன்றா வளர்ச்சி உற்பத்தி கோட்பாட்டின் கீழ் திருப்பூரில் நடைபெற்று வரும் அனைத்து உற்பத்தி நிலைகள் குறித்தும், அதை பின்பற்றி நடக்கும் ஆடை உற்பத்தி பணிகள் குறித்தும் விளக்கப்படம் மூலம் குழுவினருக்கு விளக்கம் அளித்தார்.

இங்கிலாந்து நாட்டின் குழுவினர் இதை அறிந்து வியந்து பாராட்டினார்கள். தங்களின் தேவைகள் குறித்தும் அந்த குழுவினர் காணொலிக்காட்சி மூலமாக விளக்கினார்கள். அந்த குழுவினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு திருப்பூரில் கட்டமைப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வரும் காலத்தில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்துடன் இணைந்து செயலாற்றி, திருப்பூர் ஆயத்த ஆடை வர்த்தக வளர்ச்சிக்கு உதவுவதாகவும் அந்த குழுவினர் உறுதி அளித்தனர். முடிவில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் திருக்குமரன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News