திருப்பூர் மாநகராட்சி மண்டல ஆய்வுக்கூட்டம்
திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலத்தில் மேயர் தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற்றது.;
Update: 2023-12-29 04:48 GMT
ஆய்வு கூட்டம்
திருப்பூர் மாநகராட்சி,1-வது மண்டல அலுவலகத்தில், மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் 1-வது மண்டலத்திற்கு உட்பட்ட வார்டுகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து வார்டு வாரியாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு மாமன்ற உறுப்பினர்களிடம் குறைகள் கேட்டறியப்பட்டன.இக்கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார்,துணை மேயர் பாலசுப்ரமணியம், மண்டல தலைவர்உமாமகேஸ்வரி வெங்கடாஜலம், மாமன்ற உறுப்பினர்களும் மற்றும் மாநகராட்சி அலுவலர்களும் கலந்து கொண்டனர்.