திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு - போக்குவரத்து துண்டிப்பு

வெள்ளப்பெருக்கு காரணமாக அணைப்பாளையம்புதிய பாலம் வழியாக போக்குவரத்து மாற்றம்.வெள்ள நீர் ஆர்ப்பரித்து வருவதால் அணைப்பாளையம் தரைப்பாலம் மூடப்பட்டது.

Update: 2024-05-23 09:16 GMT

திருப்பூர் நொய்யல் ஆறு

திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு. கல்லூரி சாலை - மங்கலம் சாலையை இணைக்கும் அணைப்பாளையம் தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது - போக்குவரத்து துண்டிப்பு. வெள்ளப்பெருக்கு காரணமாக அணைப்பாளையம்புதிய பாலம் வழியாக போக்குவரத்து மாற்றம்.வெள்ள நீர் ஆர்ப்பரித்து வருவதால் அணைப்பாளையம் தரைப்பாலம் மூடப்பட்டது.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தென்மேற்கு பருவமழை காரணமாக பெய்து வரும்  கன மழை யால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது,வெள்ள நீரானது நுரை பொங்கி ஆர்ப்பரித்து  நொய்யல் ஆற்றில் கரைபுரண்டு செல்கிறது,குறிப்பாகதிருப்பூர் மாநகரத்திற்கு உட்பட்ட  அணைப்பாளையம் தரைப்பாலம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மங்கலம் சாலையையும் கல்லூரி சாலையையும் இணைக்கும் இந்த அணைப்பாளையம் தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியதால் முற்றிலும் வெள்ள நீர் செல்வதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அருகில் உள்ள மாற்று மேம்பாலம் வழியாக வாகன ஓட்டிகள் செல்வதால்  போக்குவரத்து தடையின்றி நடைபெற்று வருகிறது.

  மேலும் அணைப்பாளையம் தரைப்பாலத்தின் மேலே  ஆபத்தை உணராமல் நண்பர்களுடன் சேர்ந்து செல்பி எடுப்பதும் வாகனங்களை அங்கு நிறுத்தி கழுவுவதும்  உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் . அணைப்பாளையம் தரைப்பாலம் மூழ்கியதால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News