திருப்பூர் பள்ளி மாணவன் பளு தூக்கும் போட்டியில் சாதனை.

திருப்பூர் பள்ளி மாணவன் பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்ததையொட்டி மாவட்ட ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றார்.

Update: 2024-01-31 14:01 GMT

பளு தூக்கும் போட்டியில் பள்ளி மாணவன் சாதனை இந்தியாவிற்காக விளையாடி தங்கம் வெல்வது எனது லட்சியம் தமிழ்நாட்டு விளையாட்டு சங்கம் சார்பில் நேற்று கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் 16 வயதிற்கு உட்பட்ட பளு தூக்கும் பிரிவில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரண்ட் லைன் அகாடமி பள்ளி மாணவன் ஆதித்யா (வயது 16) பெஞ்ச் பிரஸ் முதல் பரிசும், 182.5 கிலோ எடையுடன் பளு தூக்கம் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார்.

மேலும் அடுத்த மாதம் குஜராத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இன்று பெற்றோருடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் ஆதித்யா பேசுகையில்:- நான் நேஷனல் லெவல் தேர்வாகியது. பெருமையாக இருந்தது. இந்தியாவிற்காக விளையாடி கோல்ட் மெடல் அடிப்பது எனது லட்சியம் அதற்காக எனக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர், ஆசிரியர், மற்றும் பயிற்சியாளர் உறுதுணையாக இருந்ததால் வெற்றி பெற முடிந்தது. அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார். மேலும் பள்ளிக்கும் திருப்பூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள ஆதித்யாவை அனைவரும் பாராட்டி உற்சாகப்படுத்தினர்.

Tags:    

Similar News