திருத்தணி : மூதாட்டியை பலாத்காரம் செய்தவர் கைது.
Update: 2023-12-01 10:32 GMT
சதிஷ்
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பொன்பாடி கிராமத்தில் 71 வயது மூதாட்டி வசிக்கிறார். இவரது கணவர் மூன்று மாதங்களுக்கு முன் இறந்து விட்டார். நேற்று முன்தினம் இரவு வீட்டில், மூதாட்டி துாங்கிக் கொண்டிருந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த சதீஷ், 23, என்பவர், திடீரென வீட்டிற்குள் நுழைந்து, மூதாட்டியை பலாத்காரம் செய்தார். மேலும், அவரிடம் இருந்த அரை சவரன் கம்மல், 5,000 ரூபாயையும் பறித்துச் சென்றார். மூதாட்டி புகாரின்படி, திருத்தணி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, நேற்று இரவு, சதீஷை கைது செய்தனர்.