திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Update: 2023-11-22 04:30 GMT
பாஜக ஆலோசனை கூட்டம் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில்  மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட அணி பிரிவு தலைவர்கள் கூட்டம் செட்டி தெரு உண்ணாமலை திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பெட்ரோலியம் மற்றும்ரசாயன துறை மத்திய இணை அமைச்சர் பகவத் குபா கலந்து கொண்டு மத்திய அரசு வழங்கும் நலத்திட்டங்கள் கிராமப்புற மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்,பாரதிய ஜனதா கட்சியில் மட்டுமே அடித்தட்டு மக்களும் அடிப்படை உறுப்பினர் ஆன பின்பு வட்டத் தலைவர், நகரத் தலைவர் மற்றும் மாவட்ட மாநில பொறுப்புக்கும் எம்எல்ஏ ஆகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் மத்திய அமைச்சர்களாகவும் ஆக முடியும் மற்ற கட்சியில் குடும்ப பின்னணி உள்ளவர்கள் மட்டுமே உயர் பதவியில் வகிக்க முடியும் எனவும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அண்ணாமலையின் பாதையாத்திரை அதிக அளவில் கட்சி நிர்வாகிகளின் பொது மக்களையும் இணைத்து நடத்த வேண்டும். வரும் 2026 இல் சட்டமன்ற தேர்தலில் நாம் அனைவரும் முழு மனதோடு பணி செய்து பாரதிய ஜனதா கட்சியை தமிழகத்தில் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் பூத் அளவில் இருந்து அதிக அளவில் கட்சியில்  பொதுமக்கள் இணைந்து வருகின்றனர். அவர்களுக்கும் நம் அரசு செய்யும் திட்டங்களை பற்றி எடுத்துக் கூற வேண்டும் மற்றும் கட்சி நிர்வாகிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கி பேசினார்.இதில் மாநிலத் துணைத் தலைவர் டால்பின் ஸ்ரீதர், கோட்ட அமைப்பு செயலாளர் எஸ் குணசேகரன், மாவட்ட பார்வையாளர் தசரதன்,  தெற்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், வடக்கு மாவட்ட தலைவர் ஏழுமலை, மாவட்ட பொதுச் செயலாளர்கள் வினோத் கண்ணா, முருகன், குமாரராஜா, மாவட்ட பொருளாளர்  சுப்பிரமணியன், மாநிலச் செயலாளர் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு அறவாழி, மாவட்ட துணைத் தலைவர்கள் ,மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நகர, ஒன்றிய அணி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News