டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள்

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் அடுத்த மாதம் ஜூலை 26- ஆம் தேதி முதல் 28- ஆம் தேதி வரை டிஎன்பிஎல் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடைபெறுகின்றன.

Update: 2024-06-23 11:30 GMT

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள்

தமிழகம் முழுவதும் திறமையான கிரிக்கெட் வீரா்களை கண்டறியும் வகையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் 2016 முதல் நடத்தப்பட்டு வரும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகளின் 8ஆவது தொடா், அடுத்த மாதம் ஜூலை 5-ஆம் தேதி சேலத்தில் தொடங்குகிறது. சேலம், கோவை, திருநெல்வேலி, திண்டுக்கல், சென்னை ஆகிய 5 இடங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. சென்னை சேப்பாக்கத்தில் குவாலிபயா் 2, இறுதிப் போட்டி மட்டுமே நடைபெறும்.

ஜூலை 5 முதல் 11 வரை சேலத்திலும், ஜூலை 13 முதல் 18 வரை கோவையிலும், ஜூலை 20 முதல் 24 வரை திருநெல்வேலியிலும், ஜூலை 26 முதல் 28 வரை நத்தத்திலும் லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. ஜூலை 30, 31 எலிமினேட்டா் போட்டிகள் திண்டுக்கல்லில் நடைபெறும். 8 அணிகள் பங்குபெறும் இந்த போட்டிகளில், ஐபிஎல் கிரிக்கெட் வீரா்களும் விளையாடுகின்றனா். ஒவ்வொரு அணியிலும் 70 சதவீத வீரா்கள், அந்தந்த மாவட்டங்களைச் சோ்ந்தவா்களாக இருப்பா் என்றனா்.

Tags:    

Similar News