கும்பகோணம் அருகே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மாதிரி தேர்வு
கும்பகோணம் அருகே இன்னம்பூர் கிராமத்தில் திருமா பயிலகம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முன் மாதிரி தேர்வு நடைபெற்றது.
கும்பகோணம் அருகே இன்னம்பூர் கிராமத்தில் திருமா பயிலகம் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முன் மாதிரி தேர்வு நடைபெற்றது. கும்பகோணம் அருகே இன்னம்பூர் கிராமத்தில் திருமா பயிலகம் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு பயிற்சி மையத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விசிக தலைவர் எம்.பி தொல்.திருமாவளவன் திறந்து வைத்தார். தொடர்ந்து ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 முன் மாதிரி தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருமா பயிலகத்தின் மூன்றாம் ஆண்டை முன்னிட்டு டிஎன்பிஎஸ்சி குரூப்-4 மாதிரி தேர்வு நடைபெற்றது. இதில் காலிப்பணியிடங்களுக்கு (இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், கிராம நிா்வாக அலுவலா், வரித்தண்டலா், பண்டக காப்பாளா் உள்ளிட்ட பதவிகளுக்கு) குரூப்-4 மாதிரி தோ்வு நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அதிக மதிப்பெண் பெறும் முதல் மூன்று மாணவ மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,500, மூன்றாம் பரிசாக ரூ 5,000 வழங்கப்பட்டது.
இந்த முன் மாதிரி தேர்வை சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி துவக்கி வைத்தார். இதில் விசிக மாவட்ட செயலாளர் முல்லைவளவன், முன்னாள் மண்டல செயலாளர் விவேகானந்தன், நீலப்புலிகள் கட்சி தலைவர் இளங்கோவன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், திருமா பயிலகம் ஒருங்கிணைப்பாளர் வேலன், செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் ஆசிரியர்கள் திருமா பயிலகம் குழுவினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.