குமரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 இலவச மாதிரி தேர்வு 2-ம் தேதி
கன்னியாகுமரி பயோனியர் குமாரசாமி கல்லூரியில் குரூப் 4 இலவச மாதிரி தேர்வு நாளை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
Update: 2024-06-01 02:37 GMT
இலவச தேர்வு
கன்னியாகுமரி மாவட்ட மைய நூலகர் மேரி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4 தேர்வு வருகிற 9- 6 - 2024 அன்று நடக்கிறது. இந்த தேர்வில் வெற்றி பெற கன்னியாகுமரி மாவட்ட மைய நூலகம், டாக்டர் கே பத்மநாபன் பயோனியார் அகாடமி மற்றும் பயோனியர் குமாரசாமி கல்லூரியும் இணைந்து இலவச மாதிரி தேர்வை நடத்துகிறது.
குமாரசாமி கல்லூரியில் வருகிறது 2-ம் தேதி காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடக்கிறது. இலவச மாதிரி தேர்வு எழுத விரும்புவர்கள் 8124005588, 81 2400 6688 என்ற எண்களில் பதிவு செய்து, தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டுகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.