தமிழகத்தில் பாஜ., ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகள் திறக்கப்படும்

தமிழகத்தில் பாஜ., ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என, மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.;

Update: 2024-01-06 01:28 GMT

தமிழகத்தில் பாஜ., ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என, மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

சேலத்தில் 3வது நாளாக என் மண், என் மக்கள் நடைபயணம் நேற்று நடைபெற்றது. பின்னர் இரவு தாதகாப்பட்டியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு பா.ஜ., மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: அரசியல் மாற்றம் வேண்டும் என்று தமிழக மக்கள் விரும்புகின்றனர். தமிழக அமைச்சர்களில் 16 பேர் மீது ஊழல் வழக்கு உள்ளது. அமைச்சர்கள் மீதே ஊழல் வழக்கு இருந்தால் எப்படி ஆட்சி சிறப்பாக இருக்கும். காமராஜர் 9 ஆண்டுகளில் 18 ஆயிரம் பள்ளிக்கூடங்களை திறந்தார். தமிழகத்தில் எங்கும் பசி இருக்கக் கூடாது என்பதற்காக எம்.ஜி.ஆர். திட்டங்கள் கொண்டு வந்தார்.

Advertisement

தமிழகத்தில் தற்போது 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகிறார்கள். 5 லட்சம் பேரிடம் கையெழுத்து பெற்ற தி.மு.க. அரசைத்தான் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். சென்னை பெரு வெள்ளத்தின் போது தி.மு.க.வினர் வெளியே வருவதற்கு 4 நாட்கள் ஆனது. தென் தமிழகத்தில் வரலாறு காணாத மழை. ஆனால் தி.மு.க. அமைச்சர்கள் இளைஞர் அணி மாநாட்டை பார்த்துக் கொண்டிருந்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணி குறித்து பார்த்துக் கொண்டிருந்தார். தமிழகத்தில் பிறக்காத பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் தொன்மையான மொழி தமிழ்மொழி தான் என்று கூறுகிறார். தமிழகத்தில் சாதி வைத்து தான் அரசியல் செய்கிறார்கள். தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்தால், கள்ளுக்கடைகள் திறக்கப்படும். அதே போன்று 3 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும்.

கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு ரூ.6 லட்சத்து 23 ஆயிரம் கோடி தமிழக அரசு வரி செலுத்தி உள்ளது. ஆனால் மத்திய அரசு ரூ.6 லட்சத்து 93 ஆயிரம் கோடி தமிழக அரசுக்கு வழங்கி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கட்சிகளை தாண்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்கு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News