சபரிமலையில் நாளை தரிசன நேரம் குறைப்பு
சபரிமலையில் நாளை (26.12.23) தரிசன நேரம் குறைப்பு"வெர்ச்சுவல் க்யூ" முன்பதிவு எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
சபரிமலையில் நாளை (26.12.23) தங்க அங்கி சார்த்திய ஐயப்பனுக்கு "மகா தீபாராதனை" ஏற்பாடுகளுக்காக மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படும்.
பிற்பகல் மூன்று மணிக்கு திறக்கப்பட வேண்டிய சபரிமலை நடை, மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது. இதன் மூலம் பக்தர்களின் தரிசன நேரம் நாளை (26.12.23) இரண்டு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க, ஏற்கனவே டிசம்பர் 26 ஆம் தேதி "வெர்ச்சுவல் க்யூ" மூலம் முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தில் இருந்து 64 ஆயிரம் ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜை நடக்கும் டிசம்பர் 27ஆம் தேதி முன்பதிவு எண்ணிக்கை 70 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
தங்க அங்கியில் ஜொலிக்கும் ஐயப்பனுக்கு நாளை (26.12.23) மாலை மகா தீபாராதனை முடிந்ததும் வழக்கம் போல இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். டிசம்பர் 27ம் தேதியான மறுநாள் வழக்கம்போல அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும். அன்று மதியம் 12:30 மணிக்கு சபரிமலை ஐயப்பனுக்கு பிரதான மண்டல பூஜை நடக்கிறது