தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை
தஞ்சை மாவட்டத்தில் மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை ;
By : King 24x7 Angel
Update: 2024-02-23 10:30 GMT
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்த கலெக்டர்
தஞ்சாவூர் மாவட்டத்தில், நடைபெறவுள்ள மாசிமகத் திருவிழாவை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் மாசிமகத்தன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இவ்வாண்டு கொண்டாடப்படவுள்ள மாசிமகத் திருவிழாவினை முன்னிட்டு 24.02.2024 (சனிக்கிழமை) அன்று ஒருநாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.