நாளை பெரிய வியாழன் - கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும்  நிகழ்ச்சி

குமரி மாவட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் பெரிய வியாழன் தினத்தை முன்னிட்டு நாளை பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Update: 2024-03-27 03:47 GMT

பைல் படம் 

கிறிஸ்தவர்களின் புனித பண்டிகையான ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு அதற்கு முந்தைய வியாழக்கிழமை அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பாதம் கழுவும் நிகழ்ச்சி நாளை வியாழக்கிழமை நடக்கிறது. இதை ஒட்டி குமரி மாவட்டத்தில் கோட்டார் மறை  மாவட்டத்தில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நாளை இரவு ஆயர் நசரேன்  சூசை தலைமையில் திருப்பலி நடைபெறும்.

திருப்பலியினிடைய ஆயர் பக்தர்களின் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடக்கிறது.   இதேபோல் குழித்துறை மறை  மாவட்டத்தில் திருத்துவபுரம் மூவொரு  இறைவன் பேராலயத்தில் நடைபெறும் திருப்பலி மற்றும் பாதம் கழுவும் நிகழ்ச்சியில் ஆயர் ஆல்பர்ட் அனஸ் தாஸ் கலந்து கொள்கிறார்.மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து  கத்தோலிக்க கிறிஸ்தவர் அருட்பணியாளர்கள் தலைமையில் நாளை இரவு திருப்பலி மற்றும்  பாதம் கழுவுதல்  நிகழ்ச்சி நடைபெறும். நாளை மறுநாள்  வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாக  கடைபிடிக்கப்படுகிறது.

Tags:    

Similar News