முத்தமிழ்த்தேர் - அலங்கார ஊர்தி நாளை திருவண்ணாமலை வருகை!

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டை போற்றும் முத்தமிழ்த்தேர் - அலங்கார ஊர்தி நாளை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை

Update: 2023-11-29 05:28 GMT

முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை போற்றும் முத்தமிழ்த்தேர் - அலங்கார ஊர்தி 30.11.2023 அன்று திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை மாவட்ட ஆட்சியர் தகவல் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை விழாவை போற்றும் விதமாக அனைத்து மக்களும் ஒரு நிலையான பங்களிப்பை வழங்க வேண்டுமென்று உன்னத நோக்கதோடு இவ்விழாவை நடத்தப்பட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 12 குழுக்கள் அமைக்கப்பட்டது.

அதில் எழுத்தாளர் குழு, சரித்திரத்தில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் தமிழ் நாட்டுக்கு ஆற்றிய அரும்பணிகளை போற்றும் வகையில் பல்வேறு முன்னேற்பாடுகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இன்றைய தலைமுறை உணரும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞரின் பன்முகத்தன்மையை எடுத்து கூறும் வகையில் அலங்கார ஊர்தி தயார் செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் வருகின்ற 30.11.2023 வியாழக்கிழமைதிருவண்ணாமலை மாவட்டத்தில் காலை 9 மணிக்கு செங்கம் பேருந்து நிலையம் அருகிலும் இதனை தொடர்ந்து காலை 11.30 மணிக்கு கலைஞர் கருணாநிதி அரசு கலை கல்லூரி அருகிலும், மாலை 2 மணிக்கு தென்மாத்தூர் அருணை பொறியியல் கல்லூரி அருகிலும் வருகை தரும் முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தியானது பொது மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது. மேலும் பொது மக்கள், மாணவ மாணவியர்கள், இளம் தலைமுறையினர் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News