சூறைக்காற்றுடன் பெய்த மழை - வாழை மரங்கள் சேதம்

திருவட்டாறு அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் 1500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

Update: 2024-04-28 06:03 GMT

முறிந்து விழுந்த வாழை மரங்கள்.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அடுத்த கொல்வேல் கோட்டுக்கோணம் புல்விளை பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் அந்த பகுதியில் சுமார் இரண்டு ஏக்கர் ரப்பர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து அதில், ஊடுபயிராக 1500 ஏத்தன் வாழைகள் நட்டிருந்தார். அவற்றுக்கு தினமும் நீர்பாய்ச்சி வாழைகள் குலை தள்ளும் பருவத்திற்காக காத்திருந்தார்.

இந்நிலையில், அப்பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்தமழையில் இவர் நட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. தனக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கிராம நிர்வாக அதிகாரியிடம் மனு அளித்ததை தொடர்ந்து அதிகாரிகள் .நேற்று பார்வையிட்டனர்.இது போல் தெற்றிகோடு பகுதியில் தாசையன் என்ற விவசாயி ஒரு ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து நட்டிருந்த பெரும்பாலான ஏத்தன் வாழைகளும் முறிந்து விழுந்தன.இரண்டு மாதத்தில் அறுவடை செய்யும் நிலையில் இருந்த வாழை மரங்கள் முறிந்து விழுந்ததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

Tags:    

Similar News