"அறுபடை வீடுகளுக்கு சுற்றுலா காஞ்சிபுரம் பக்தர்கள் பயணம்"
அறுபடை வீடு சுற்றுலாவிற்கு 57 பக்தர்கள், சென்னை கந்தக்கோட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர்
Update: 2024-01-29 06:43 GMT
ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கு கட்டணமில்லா ஆன்மிக சுற்றுலாவாக, 200 பக்தர்கள் வீதம் ஆண்டிற்கு ஐந்து முறை, 1,000 மூத்த குடிமக்கள் அழைத்து செல்லப்பட உள்ளனர். இதன் முதற்கட்ட அறுபடை வீடு ஆன்மிக பயணம் துவக்க விழா சென்னை, கந்தக்கோட்டத்தில் இன்று துவக்கப்பட உள்ளது. இதையொட்டி, காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து அறுபடை வீடு சுற்றுலாவிற்கு 57 பக்தர்கள் நேற்று, சென்னை கந்தக்கோட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர். காஞ்சிபுரம் ஹிந்து சமய அறநிலையத் துறை ஆணையர் வான்மதி தலைமையில், புறப்பட்ட பக்தர்கள், இன்று காலை அறுபடை வீடுகளுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல உள்ளதாக தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் தியாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்."