திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு 3வது நாளாக தடை.

வெள்ளப்பெருக்கு காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-12-19 06:51 GMT
பெருவெள்ளம்.... திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக 4 மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு நீர்நிலைகள், அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து உள்ளது. இதனால் பேச்சிப்பாறை அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திற்பரப்பு அருவிக்கு ஏற்கனவே உபரிநீர் சிற்றாடை மற்றும் பேச்சிபாறையில் உபரிநீராகவும் வெளியேற்றப்படுகிறது. ஏற்கனவே திற்பரப்பு அருவியில் நீர்வரத்து அதிகரித்தை தொடர்ந்து திற்பரப்பு அருவியில் ஏற்கனவே சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் 3வது நாளான இன்று திற்பரப்பு அருவியில் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. மேலும் அருவி கரையோரம் யாரும் செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News