சிறப்பு மலை ரயிலில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள்.

தொடர் விடுமுறை காரணமாக குன்னூர்-உதகை வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.;

Update: 2023-10-22 08:46 GMT
  • whatsapp icon
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தென்னக ரயில்வே சார்பில் இன்று சிறப்பு மலை ரயில் சேவை இயக்கப்பட்டது.

நாள் ஒன்றுக்கு நான்கு சேவை என உதகை முதல் குன்னூர் வரை சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டது. இந்த மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆவலோடு காத்திருந்தனர். ரயில் பயணத்தின் போது அளவற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் , குகைகளும், மலை முகடுகளும், தேயிலை தோட்டங்களும் இயற்கை காட்சிகளும் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளதாக சுற்றுலா பணிகள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News