டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - தொழிலாளி உயிரிழப்பு
காடையாம்பட்டி அருகே கல்குவாரி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த கூலித்தொழிலாளி மருத்துவனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.;
Update: 2024-01-25 02:45 GMT
சதீஷ்குமார்
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே உள்ள தளவாய்பட்டியில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில் பொட்டியபுரம் ஊராட்சியில் வசிக்கும் ராமச்சந்திரன் மகன் சதீஷ்குமார்(35) கூலித்தொழிலாளி. கல் குவாரியில் டிராக்டர் ஓட்டி சென்றுள்ளார்.அப்பொழுது அவர் ஓட்டி சென்ற டிராக்டர் சுமார் 50அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அவர் படுகாயமடைந்தார். பின்னர் அக்கம்பக்கம் உள்ளவர்கள் படுகாயமடைந்த தொழிலாளியை மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் தொழிலாளியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.