திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகனுடன் தர்னாவில் ஈடுபட்ட வியாபாரி
நிதி நிறுவனத்தார் தனது தள்ளு வண்டியை எடுத்துச் சென்றதாலும் காவல் நிலையத்தில் போலீசார் அலட்சியமாக நடந்து கொண்டதாலும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகனுடன் தர்னாவில் ஈடுபட்ட வியாபாரியால் பரபரப்பு.
திருப்பூர் மாவட்டம் கொமரலிங்கம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி மகன் மற்றும் மனைவியுடன் வசித்து வரும் இவர் தள்ளுவண்டி மூலம் நிலக்கடலை வியாபாரம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருப்புசாமி கொமிலிங்கம் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தாரிடம் இருந்து ஒரு லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் கடன் பெற்ற நிலையில் கடனை சில மாதங்களாக கருப்பசாமி கட்டி வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக வட்டித் தொகை கட்டவில்லை என கூறப்படுகிறது.
இதனிடையே நிதி நிறுவன ஊழியர்கள் கருப்புசாமிபின் தள்ளுவண்டி மற்றும் தள்ளுவண்டியில் இருந்த நிலக்கடலை மற்றும் எடை தராசு உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட கருப்பு சாமி கொமரலிங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த மோகன் என்பவர் தரக் குறைவான வார்த்தைகளால் பேசியதோடு புகார் அளித்த கருப்புசாமியையும் அலட்சியப் படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட கருப்புசாமி இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு தனக்கு நீதி கேட்டு மகனுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் நடந்த போலீசார் கொமரலிங்கம் காவல் நிலையத்தில் போலீசாருக்கு தகவல் கொடுத்ததோடு, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து தர்னாவில் ஈடுபட்ட கருப்புசாமி போராட்டத்தை கைவிட்டார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.