வியாபாரிகள் சங்க வெள்ளி விழா

கேளம்பாக்கத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க வெள்ளி விழா நிகழ்ச்சியில்,தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவர் விக்கிரமராஜா பங்கேற்றார். ஜிஎஸ்டி குறித்து விரைவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

Update: 2024-01-03 03:15 GMT
நினைவு பரிசு 

 செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் வெள்ளிவிழா மற்றும் புதியநிர்வாகிகள் பதவியேற்பு விழா சங்கத்தலைவர் டாக்டர் .ஜெய்சந்த் தலைமையில் நடைப்பெற்றது. இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் டாக்டர். ஏ.எம். விக்கிரமராஜா கலந்துகொண்டு காமராஜர் சிலைக்கு மாலையணிவித்து வணிகர் சங்க கட்டிடத்தில் அமைக்கப்பட்ட சங்கக்கொடியை ஏற்றி கல்வெட்டை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.நிகழ்ச்சியில் வீரவாளுடன் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் விக்கிரமராஜா தற்போது மத்திய அரசின் வரி அதிகமாக உள்ளது குறிப்பாக உணவு பாதுகாப்பு தர விறைவு சட்டம் குறித்தும் ஜிஎஸ்டி குறித்து அடுத்த வாரம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை புது டில்லியில் சந்தித்து இது குறித்து விவாதிக்க இருப்பதாகவும் வணிகர்கள் பாதுகாப்புடன் வாழ்ந்திட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் சில மாதங்களுக்கு முன்பு மெடிக்கல் ஷாப் ஓனர் ஒருவர் கொலை வழக்கில் இதுவரை மூன்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்து ஒருவரை தேடி வருகின்றனர்.விரைவில் அவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் வணிகர்களுக்கு மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.. நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் முனியாண்டி,மாவட்ட துணைத் தலைவர்கள் சுப்பிரமணி, சுதாகர்,பாஸ்கர் உள்ளிட்ட மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News