ஒழுங்குமுறை கூடத்தில் பாரம்பரிய நெல் ஏலம்

பாபநாசம் ஒழுங்குமுறை கூடத்தில் பாரம்பரிய நெல் ஏலம் நடைபெற்றது.

Update: 2024-02-29 08:30 GMT
பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாரம்பரிய நெல் ஏலம் பாபநாசம் பிப். 29 பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாரம்பரிய நெல் ஏலம் கண்காணிப்பாளர் தாட்சாயினி தலைமையில் நடைபெற்றது. மறைமுக ஏலத்தில் 27 குவிண்டால் கருப்பு கவுனி கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.72.50, க்கும் குறைந்தபட்ச வழியாக ரூ.70-க்கும் சராசரி வழியாக ரூ.72.20க்கும் விலை போனது. இதன் மூலம் ரூ. 2 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. இதில் சென்னை ,திருச்சி, திருவாரூர், மற்றும் தஞ்சாவூரை சேர்ந்த தனியார் வியாபாரிகள் கலந்து கொண்டனர். மேலும் ஒவ்வொரு புதன்கிழமை தோறும் பாரம்பரிய நெல் ரகங்களுக்கு ஏலம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர் .
Tags:    

Similar News