வடலூரில் நாளை போக்குவரத்து மாற்றம்

வடலூரில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அன்று அதிகாலை, 4 மணி முதல், இரவு 10 மணி வரை தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2024-01-24 10:19 GMT


வடலூரில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அன்று அதிகாலை, 4 மணி முதல், இரவு 10 மணி வரை தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் நாளை (25ம் தேதி) நடைபெறும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக அன்று அதிகாலை, 4 மணி முதல், இரவு 10 மணி வரை தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி வடலூர் காவல்துறை சார்பில், 3 தற்காலிக கார், வேன் மற்றும், பேருந்து நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலூரில் இருந்து வரும் வாகனங்கள் ராசாக்குப்பம், இளங்கோ நகர் புதிய பைபாஸ் அருகில் வலது பக்கமும், பண்ருட்டியிலிருந்து வரும் வாகனங்கள் அகர்வால் பேக்கரி வழியாக ராகவேந்திரா சிட்டியிலும், சேத்தியாத்தோப்பில் இருந்து வரும் வாகனங்கள் கருங்குழி கைகாட்டி இடது புறமாக திரும்பி, கருங்குழி, மேட்டுக்குப்பம் வழியாக வீணங்கேணி டி.என்.சி.எஸ்.சி., இடத்திலும், நிறுத்த வேண்டும். மேற்கண்ட அனைத்து தற்காலிக வாகனம் நிறுத்தும் இடங்களில் இருந்து வள்ளலார் ஜோதி தரிசனம் காண செல்லும் சன்மார்க்க பக்தர்களுக்கு தற்காலிக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும் அன்று சென்னை, கடலூர், திருச்சி, சேலம், கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள், கார், வேன், 25ம் தேதி அதிகாலை 4 மணி முதல், இரவு 10 மணி வரை வடலூர் வராமல் வேறு வழிகளில் செல்ல தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி கடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் அனைத்து பேருந்துகளும் ராசாக்குப்பம் புதிய பைபாஸ் அருகில் இடது புறமாக திரும்பி கருங்குழி கைகாட்டி, மேட்டுக்குப்பம், வீணங்கேணி வழியாக விருத்தாசலம் செல்ல வேண்டும்.

விருத்தாச்சலத்தில் இருந்து கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் வாகனங்கள் மந்தாரக்குப்பம், நெய்வேலி டவுன்ஷிப், நெய்வேலி ஆர்ச், கொள்ளுக்காரன்குட்டை, சத்திரம், குள்ளஞ்சாவடி மற்றும் ஆலப்பாக்கம் வழியாக செல்லுமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வடலூர் பண்ருட்டி செல்லும் வாகனங்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடலுார் மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்ணுத்தோப்பு பழைய பாலம் அருகில் இடது பக்கத்தில் தற்காலிக தரைப்பாலம் போடப்பட்டு பொது போக்குவரத்திற்கு திறக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News