நீலகிரியில் இ-பாஸ் முறையால் போக்குவரத்து நெரிசல்

இ-பாஸ் பெறாமல் நீலகிரிக்கு வருபவர்களால் கல்லார் சோதனைச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

Update: 2024-05-11 15:18 GMT

அணிவகுத்து நிற்கும் கார்கள்

சர்வதேச சுற்றுலாத்தலமான நீலகிரிக்கு ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை சீஸனான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் வருகின்றனர்.

இந்த 2 மாதங்களும் நீலகிரி மாவட்டம் முழுவதும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும். உணவகங்கள் தங்குமிடங்கள் என அனைத்தும் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே முன் பதிவு செய்யப்பட்டுவிடும். இந்நிலையில் இந்தாண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவின் படி இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி நீலகிரி மாவட்டத்தை தவிர வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலம் இ-பாஸ் பெற்று மட்டுமே நீலகிரிக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக மாவட்டத்திலுள்ள 16 சோதனை சாவடிகளிலும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டும் உள்ளே அனுமதிக்கின்றனர். இ-பாஸ் நடைமுறை குறித்து இன்னும் குறிப்பிட்ட சிலருக்கு தெரியவில்லை. இதனால் இ-பாஸ் பெறாமல் நீலகிரி வருகின்றனர். அப்போது அவர்களுக்கு உதவுவதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் துறையினர் பணியில் உள்ளனர். ஆனாலும் பெரும்பாலானவர்கள் இ-பாஸ் எடுத்துக்கொண்டு வரும் சூழ்நிலையில், ஒரு சிலர் இ-பாஸ் எடுக்காமல் நீலகிரிக்கு வருவதால் சோதனைச்சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

குறிப்பாக நீலகிரிக்கு முக்கிய சோதனை சாவடியான கல்லாரில் இன்று பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல வாகனங்கள் சாலையில் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால் இ-பாஸ் எடுத்து வந்த சுற்றுலா பயணிகளும் கடும் அவதிப்பட்டனர். இதற்கு இடையே இ-பாஸ் நடைமுறையால் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டதால்,

வணிகம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் தெரிவித்துள்ளனர். ன

Tags:    

Similar News