திருச்செங்கோடு மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல்

புத்தாண்டை முன்னிட்டு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் மலைப்பாதையில் ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2024-01-01 12:32 GMT

ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் சிறப்பு தரிசனங்கள் நடைபெற்றது,அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலில் அதிகாலை 3 மணி முதல் பொதுமக்கள் பக்தர்கள் வழி பாட்டுக்காக அனுமதிக்கப்பட்டனர், பக்தர்கள் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மலைப்பாதையிலேயே நிறுத்தி விட்டு சென்றதால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, இதனால் சுமார் 4 மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் கீழிருந்து மலை கோவிலுக்கு செல்ல போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement

அறங்காவலர் குழு சார்பில் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்த போதிலும் பக்தர்களும் பொதுமக்களும் மலைப்பாதை நுழைவு முதலே மலை ஏறும் வரை இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு சென்றதால் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, அறங்காவலர் குழு மூலம் போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டிருந்த வாகனங்களை மைக் மூலம் அப்புறப்படுத்த அறிவித்து அப்புறப்படுத்திய பின்பே போக்குவரத்து சரி செய்யப்பட்டது இதனால் அதிகாலை முதலே பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

Tags:    

Similar News