போக்குவரத்து காவலர்கள் - ஊர்க்காவல் படையினருக்கும் இருவேளையும் நீர் மோர் !!
மயிலாடுதுறை மாவட்ட போக்குவரத்து காவலர்களுக்கு காலை மாலை இருவேளையும் நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-09 09:55 GMT
போக்குவரத்து காவலர்கள்
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி காவல் சரகத்தில் பணிபுரியும் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கு கோடைக்காலத்தில் பணியின் போது ஏற்படும் வெயிலின் தாக்கத்தினால், அவர்களின் நலன் கருதி இன்று 09.04.2024 முதல் 31.05.2024 வரை தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேலைகளிலும் பழச்சாறு மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது.