ஆலோசனை கூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு !
மானாமதுரையில் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு - வாகன ஓட்டிகள் அவதி;
By : King 24x7 Angel
Update: 2024-04-02 04:48 GMT
ஆலோசனை கூட்டம்
மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்இந்தியா கூட்டணி கட்சி சார்பில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவு கேட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மானாமதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து இந்தியா கூட்டணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு மினி வேன் மற்றும் பேருந்துகளில் ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வந்த நிலையில் மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.