பரோட்டா சாப்பிட்ட மாணவர் மாரடைப்பால் உயிரிழந்த சோகம்.
சூலூரில் புரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Update: 2023-12-22 08:13 GMT
கோவை:திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹேமச்சந்திரன்.சூலூரில் தங்கி அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.நேற்று இரவு ஹேமச்சந்திரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பரோட்டா சாப்பிட்டதாக கூறப்படுகிறது.பின்னர் தனது அறைக்குச் சென்ற மாணவர் இன்று காலை அசைவின்றி இருப்பதை கண்ட அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹேமச்சந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து சூலூர் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் மாணவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மாணவருக்கு பரோட்டா சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும் பிரச்சனை இருந்ததாகவும் அதிக காய்ச்சலில் இருந்தபோது பரோட்டா உட்கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.