கட்டணம் குறைக்கப்பட்டதால் ரயில் பயணிகள் மகிழ்ச்சி
திருச்சி ரயில்வே கோட்டத்தில் சாதாரண பயணிகள் ரயில்களின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொரானா காலத்தில் உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளன கொரோனா தொற்றுக்காலத்தில் பயணிகள் ரயில்களின் சாதாரண கட்டணங்கள் சிறப்புக் கட்டணமாக உயர்த்தப்பட்ட து கொரானா தொற்று முடிந்து சகஜ நிலைக்கு திரும்பினாலும் பயணிகள் ரயில்களின் கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் குறைக்கவில்லை பொதுமக்கள், ரயில் பயணிகள், வர்த்தகர்கள், தன்னார்வ அமைப்புகள் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட சாதாரண ரயில் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்கள்.
இக்கோரிக்கையினை ஏற்று தென்னக ரயில்வே திருச்சி கோட்டம் திங்கள்கிழமை முதல் சாதாரண பயணிகள் ரயில்களின் கட்டணத்தை முன்பு இருந்த நிலைக்கு குறைத்துள்ளது. ரயில் நிலையங்களில் மீண்டும் பழைய கட்டணத்தில் பயண சீட்டு வழங்கப்படுகின்றன இதனால் பொதுமக்கள், ரயில் பயணிகள், வர்த்தகர்கள், தினசரி ரயிலில் செல்லும் அலுவலர்கள் மாணவ மாணவிகள் வர்த்தகர்கள் தொழிலாளிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவாக இருப்பதால் அதிக அளவில் ஏழை எளிய மக்கள் ரயிலை பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளது பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி மார்க்கத்தில் பேராவூரணிக்கு 10 ரூபாயும் ஆயங்குடிக்கு 15 ரூபாயும் அறந்தாங்கி காரைக்குடிக்கு 20 ரூபாயும் மயிலாடுதுறை மார்க்கத்தில் அதிராம்பட்டினம் மற்றும் முத்துப்பேட்டைக்கு 10 ரூபாயும் திருவாரூருக்கு 20 ரூபாயும் மயிலாடுதுறைக்கு 30 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.