செஞ்சி அருகே விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்
விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி வேளாண் கல்லூரி சார்பில் விவசாயிகளுக்காக நடைபெற்ற பயிற்சி முகாமில் விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வேளாண்மை துறை மற்றும் எஸ்.ஆர்.எம்.வேளாண் கல்லூரி சார்பில் கிராமப்புற விவசாயிகளுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் மற்றும் கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கான பயிற்சி முகாம் ஜெயங்கொண்டான் கிராமத்தில் கிராமப்புற விவசாய வேலை அனுபவம் என்ற தலைப்பில் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
வேளாண் அலுவலர் தீபிகா, உதவி வேளாண்மை அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி பேராசிரியர் முத்துக்கு மார் வரவேற்றார். உதவி பேராசிரியர்கள் முருகன், தமிழண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கு கிரா மங்களில் உள்ள வாய்ப்புகள் குறித்து விவசாயிகள் விளக்கி பேசினர்.
நிகழ்ச்சியில் பட்டுப்புழு வளர்ப்பு, தேனீ வளர்ப்பு மற்றும் ஜப்பானிய காடை வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து வேளாண் கல்லூரி 4-ம் ஆண்டு மாணவர் கள் விவசாயிகளுடன் கலந்துரையாடினர். இதில் கிராம நிர்வாக அலுவலர் எட்டியான் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.