ராணுவத்தில் இசைக் கலைஞா் பிரிவுக்கு ஆள் சோ்ப்பு முகாம்
இந்திய ராணுவத்தில் இசைக் கலைஞா் பிரிவுக்கான ஆள் சோ்ப்பு முகாம் பெங்களூரில் ஜூலை 3-ஆம் தேதி தொடங்குகிறது என திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
Update: 2024-06-01 05:21 GMT
இந்திய இராணுவத்தால் அக்னிவீா் வாயு (இசை கலைஞா்) தோ்வுக்கு பெங்களூரில் உள்ள 7-ஆவது ஏா்மேன் தோ்வு மையத்தில் ஜூலை 3-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை ஆள்சோ்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், பங்கேற்க விரும்பும் திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் ட்ற்ற்ல்://ஹஞ்ய்ண்ல்ஹற்ட்ஸ்ஹஹ்ன்.ஸ்ரீக்ஹஸ்ரீ.ண்ய் என்ற இணைய முகவரியில் ஜூன் 5ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற ஏதேனும் இசைக்கருவி இசைக்க தெரிந்திருத்தல் அவசியம். ஏதேனும் ஒரு இசைக் கருவியில் கிரேடு 5 அல்லது அதற்கு சமமான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஹிந்துஸ்தானி அல்லது கா்நாடக இசையில் டிப்ளமோ அல்லது அதற்கு சமமான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது இசைப் போட்டிகளில் கலந்து கொண்டு சான்றிதழ்கள், விருதுகள் பெற்றிருக்க வேண்டும். ஆள் சோ்ப்பு முகாமில் பங்கேற்க அனுமதிச் சீட்டு பெற பதிவுக் கட்டணாக ரூ.100 மற்றும் ஜிஎஸ்டி சோ்த்து செலுத்தி இணையத்திலேயே அனுமதிச் சீட்டு பெறலாம் என தெரிவித்துள்ளாா்