ராமநாதபுரம் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

ராமநாதபுரம் விவசாயிகளுக்கு வேளாண்மை துறையின் சார்பில் பயிற்சி முகாம் நடந்தது.

Update: 2024-02-07 06:24 GMT

ராமநாதபுரம் விவசாயிகளுக்கு வேளாண்மை துறையின் சார்பில் பயிற்சி முகாம் நடந்தது.

ராமநாதபுரம் உச்சிப்புளி வேளாண்மை துறையின் சார்பில் தாமரைக்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கீழமண்குண்டு கிராமத்தில் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பண்ணை பள்ளியில் பயிற்ச்சி முகாம் நடத்தப்பட்டது.

இப்பயிற்ச்சி ஆறு வகுப்புகளாக நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட பயிற்சிக்கு சுப்ரமணியன், வேளாண்மை இணை இயக்குனர் (ஓய்வு) விருதுநகர் கலந்து கொண்டு போசுகையில் விவசாயிகளுக்கு நெல் சாகுபடியில் பின்பற்ற வேண்டிய ரகம் தேர்வு செய்தல், உயிர் உர விதை நேர்த்தி, பூஞ்சான விதை நேர்த்தி செய்தல், கலை நிர்வாகம், உர நிர்வாகம் மற்றும் பயிர் பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்து தொழில்நுட்பங்களை விளக்கி விளக்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் திருப்புல்லாணி எம்.கே.அமர்லால் விவசாயிகளுடைய நெற்பயிருக்கு நெல் நுண்ணூட்டம் இட வேண்டிய அவசியம் மற்றும் வேளாண் துறையில் விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானிய திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார். பயிற்சியில் விவசாயிகளுக்கு உயிர் உர விதை நேர்த்தி மற்றும் நல் விதை தேர்வு செய்யும் முறைகள் செயல்முறை விளக்கம் செய்து காட்டப்பட்டது. வயல் வெளியில் விவசாயிகளுக்கு நன்மை செய்யும் பூச்சிகள் மற்றும் தீமை செய்யும் பூச்சிகள் அடையாளம் காணும் முறைகள் விளக்கி கூறப்பட்டது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி , உதவி தொழில்நுட்ப மேலாளர் பவித்ரன் மற்றும் உதவி வேளாண் அலுவலர் சண்முகநாதன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News