பாலின பாகுபாடு குறித்த பயிற்சி முகாம்
திருமருகலுக்கு உட்பட்ட சமுதாய வள பயிற்றுநர்களுக்கு பாலின பாகுபாடு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
திருமருகலில் சமுதாய வள பயிற்றுநர்களுக்கு பாலின பாகுபாடு பயிற்சி நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்திற்கு உட்பட்ட திருமருகல் 39 ஊராட்சியில் சமுதாய வள பயிற்றுநர்களுக்கு தேசிய அளவில் பாலின பாகுபாடு பயிற்சி மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இதில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் இணை இயக்குநர் -திட்ட இயக்குநர் முருகேசன் அறிவுறுத்தலின் பெயரில் பாலின பாகுபாடு பயிற்சி வட்டார இயக்க மேலாளர் அறிவுநிதி தலைமையில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட வள பயிற்றுநர் ஸ்ரீரங்கபாணி,வட்டார வள பயிற்றுநர் உதயகுமாரி ஆகியோர் பயிற்சி அளித்தார்.இதில் பாலின பிரச்சாரம்,உறுதிமொழி,குழந்தை திருமண தடுத்தல்,குடும்ப வன்முறை தடுத்தல்,பாலின பாகுபாட்டை கலைப்போம்,பாலின வன்முறைக்கு எதிராக குரல் எழுப்புவோம்,பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்தல்,பெண் உரிமையை பாதுகாப்போம்,பாலின வன்முறைக்கு முடிவு கட்டுவோம்,மிரட்டுதல் அடித்தல் நிகழ்காலம் எதிர்காலம் குறித்து பயத்தை ஏற்படுத்துதல்,உடல் ரீதியான தொடர்பு,தொடுதல்,கிள்ளுதல்,முத்தமிடுதல்,உடலுறவு,பாலியல் ரீதியாக கிண்டல் அடித்தல்,ஆபாச படங்களை காட்டுதல்,பாலினம் வாழ்வாதாரம்,பாலினம் உணவு மற்றும் ஊட்டச்சத்து,இளம் பருவத்தில் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியம்,சமத்துவம் மற்றும் கல்வியில் சமபங்கு,பெண்களின் எழுத்தறிவு,பாலின ரீதியிலான வன்முறை,பாலின அடிப்படையிலான வேலை,பிரிவினை சமூக கட்டு மானம் மற்றும் சமூக மயமாக்கல் போன்றவற்றை சமுதாய வள பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் இந்துஜா, கார்த்திகா,சுபஸ்ரீ,அமுதா,அண்ணாதுரை மற்றும் லதா ஆகியோர் கலந்து கொண்டனர்.