திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பயிற்சி வகுப்பு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நாளை சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு நடக்கிறது.

Update: 2024-01-12 10:44 GMT

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நாளை சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு நடக்கிறது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நாளை (13ம் தேதி) சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

இது தொடர்பாக திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கை : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னெடுப்பில் வருகிற 13.01.2024 சனிக்கிழமை அன்று மாவட்டக் கழகங்கள் நடத்தும் மாவட்ட அளவிளான ”சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு” நடத்திட தி.மு.க தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. தலைமைக் கழகத்தின் அறிவுரைப்படி தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் 13.01.2024 சனிக்கிழமை காலை 10.00 மணி அளவில் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் வைத்து  மாவட்ட அளவிலான சமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது.

இப்பயிற்சி வகுப்பை மாவட்ட கழக செயலாளராகிய நான் தொடங்கி வைக்க இருக்கிறேன். இப்பயிற்சி வகுப்பில் கழக இளைஞர் அணி – மாணவர் அணி – மகளிர் அணி – தொண்டர் அணி – தொழிலாளர் அணி – வழக்கறிஞர் அணி – பொறியாளர் அணி - மருத்து அணி – விளையாட்டு மேம்பாட்டு அணி – சிறுபாண்மை நல உரிமைப்பிரிவு – விவசாய அணி – விவசாய தொழிலாளரணி – சுற்றுச்சூழல் அணி – அயலக அணி – உள்ளிட்ட கழக சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள் – துணை அமைப்பாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஆர்வமுள்ள கழக நிர்வாகிகள் உள்ளாட்சிமன்ற பிரதிநிதிகள் அனைவரும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News