மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு
ஆரணியில் மண்டல தேர்தல் அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைப்பெற்றது.;
Update: 2024-03-30 08:59 GMT
பயிற்சி வகுப்பு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் உள்ள ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 311 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நாளை ஆரணி சுப்பிரமணிய சாஸ் திரியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அது தொடர்பாக ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. இந்த பயிற்சி வகுப்பில் தாசில்தார் மஞ்சுளா, வட்ட வழங்கல் அலுவலர் மூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் திருமலை, மண்டல துணை தாசில்தார்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.