காஞ்சிபுரம் விவசாயிகளுக்கு பயிற்சி !
காஞ்சிபுரம் மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில், உயிர்ம வேளாண் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-07-04 12:23 GMT
farmers
காஞ்சிபுரம் மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில், உயிர்ம வேளாண் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி நடந்தது. காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பு வேளாண் இணை இயக்குனர் ராஜ்குமார் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உயிர்ம வேளாண் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கீழ்நெல்லி காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் ஐஸ்வர்யா உயிர்ம வேளாண் ஆலோசனைகளை வழங்கினார். மேலும், ஆடாதொடா, நொச்சி, பூச்சி விரட்டி குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட திட்டங்கள் வேளாண் துணை இயக்குனர் கிருஷ்ணவேரி பேசினார்.