அரசு விதைப்பண்ணையில் கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி
இருவேல்பட்டு அரசு விதைப்பண்ணையில் கல்வி சுற்றுலா வந்த புதுச்சேரி வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு அரசு விதைப்பண்ணையில் கல்வி சுற்றுலாவாக வந்த புதுச்சேரி மாநில மணக்குள விநாயகர் வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த மாணவர்களுக்கு விதைப்பண்ணை அமைத்தல், கலவன்கள் நீக்குதல், சுத்திப்பணி மேற்கொள்ளுதல், சான்றட்டை பொருத்துதல் போன்ற விதைச்சான்று நடைமுறைகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் பாலசுப்பிரமணியன், விதைச்சான்று அலுவலர்கள் விஜயா, கருணாநிதி, விதை சுத்திகரிப்பு நிலைய வேளாண்மை அலுவலர் கவுசல்யா, இருவேல்பட்டு பண்ணை மேலாளர் கவிப்பிரியன் ஆகியோர் அளித்தனர். அப்போது வேளாண்மை கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஈஸ்வரதாஸ், மோகன், விமல் கீர்த்தனா ஆகியோர் உடன் இருந்தனர்.