வெள்ள நிவாரணம் வழங்க அரசு ஊழியர்களுக்கு பயிற்சி
வெள்ள நிவாரண தொகையை வழங்குவதற்காக அரசு பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்பு, சிங்கபெருமாள்கோவிலில் நேற்று நடந்தது.
Update: 2023-12-16 12:09 GMT
செங்கல்பட்டு மாவட்டத்தில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, வெள்ள நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு, 6,000 ரூபாய் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டது. இதில், திருப்போரூர், வண்டலுார் தாலுகாவில், 72,000 பேர் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு, 80 ரேஷன் கடை மூலமாக நிவாரண தொகை, வரும் 17ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. இதற்காக, பயனாளிகளுக்கு டோக்கன் வினியோம் நேற்று துவங்கியது. இதைத் தொடர்ந்து, வெள்ள நிவாரண தொகை வழங்க, கூட்டுறவு நியாய விலைக் கடை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு, சிங்கபெருமாள்கோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில், மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தமிழ்ச்செல்வி, மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.