ஊத்தங்கரையில் பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி

ஊத்தங்கரையில் நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.

Update: 2024-01-26 10:38 GMT

மேலாண்மை பயிற்சியில் கலந்து கொண்டவர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டாரத்தில் வேளாண்மைத்துறை சார்பில் கொட்டாரப்பட்டி கிராம விவசாயிகளுக்கு நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து, ஒருநாள் பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த பயிற்சியினை வேளாண்மை உதவி இயக்குநர் முனைவர் கருப்பையா தொடங்கி வைத்து, நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மற்றும் இயற்கை வேளாண்மை குறித்தும், நிலக்கடலை சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

நிலக்கடலைக்கு ஜிப்சம் இடுவதன் நன்மைகள், பயிர் பாதுகாப்பு முறைகள், நிலக்கடலையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, பயிர் சேதத்தை தடுக்கும் முறைகள் பற்றி தெளிவாக விளக்கம் அளித்தார்.

உயிர் உர விதை நேர்த்தி செய்தல், தரமான வீரிய ரகங்களை தேர்வு செய்ய வேண்டும், விதைகளை உயிர் பூஞ்சானகொல்லி சூடோமோனாஸ் மற்றும் உயிர் உரங்கள் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா அல்லது ஐசிங்க் பாக்டீரியா விதை நேர்த்தி செய்து விதைப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினார். நவரை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரினை காப்பீடு செய்து பயன்பெறுமாறு விவசாயிகளை கேட்டுக்கொண்டார்.

உதவி வேளாண்மை அலுவலர் நந்தகுமார்,அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் சதீஷ்குமார் ஆகியோர் துறை சார்ந்த பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். இதில் 40 க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்து கொன்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில் நுட்ப மேலாளர் சாரதி, பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்ட பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர் சரத்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News