ரிஷிவந்தியம் அருகே இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி
ரிஷிவந்தியம் அருகே இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி;
By : King 24X7 News (B)
Update: 2023-12-26 10:28 GMT
இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி
ரிஷிவந்தியம் அடுத்த நுாரோலை கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, வேளாண் துணை இயக்குனர் சுந்தரம் தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குனர் ஷியாம்சுந்தர் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் கிருஷ்ணபிரசாத் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், இயற்கை முறையில் விவசாயம் செய்வதால் ஏற்படும் நன்மைகள், உழவன் செயலியின் பயன்பாடு, மண்வள மேலாண்மை, ஞ்சகாவியம், மீன் கரைசல் மற்றும் அமிர்த கரைசல் தயாரிக்கும் முறை குறித்து விளக்கப்பட்டது.
தொடர்ந்து, இயற்கை முறையில் பயிர் செய்யும் விவசாயிகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து, மற்ற விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தனர்.