வாக்குப்பதிவு இயந்திர பயன்படுத்தல் குறித்த பயிற்சி
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் தலைமையில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு மின்னணு வாக்கபதிவு இயந்திரங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.;
Update: 2024-04-10 06:46 GMT
பயிற்சி வகுப்பு
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன் குமார்ஜிகிரியப்பனவர் தலைமையில் மாநகராட்சி கூட்டரங்கில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ளடங்கிய 114 - திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மண்டல தேர்தல் அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளித்து பணிகளுக்கான ஆலோசனை வழங்கப்பட்டது. உடன் துணை ஆணையாளர் சுந்தர்ராஜ், உதவி ஆணையாளர் வினோத், துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம் உட்பட பலர் உள்ளனர்.