வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ள நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்டம், வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ள நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம், தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-06-02 06:22 GMT

வாக்கு எண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ள நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம்

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி அன்று ஆதவ் பப்ளிக் பள்ளியில் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணுவது தொடர்பான 2 ஆம் கட்ட பயிற்சியானது வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள் மற்றும் நுண்பார்வையாளர்கள் ஆகியோர்களுக்கு ஜூன் 1ம் தேதி மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கற்பகம், தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 98 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்களும் மற்றும் 100 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களும், 95 நுண்பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். இவர்களுக்கு வாக்குகள் எண்ணும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தபால் வாக்கு எண்ணுவது தொடர்பாக தாபால் வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் 6 நபர்களுக்கும், வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள் 12 நபர்களுக்கும், தபால் வாக்கு எண்ணிக்கைக்கான நுண்பார்வையாளர்கள் 6 நபர்களுக்கும் தபால் வாக்குகள் எண்ணும் முறை குறித்து பயிற்சி அளித்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல்பிரபு, சார் ஆட்சியர் கோகுல் , உள்ளிட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சங்கரராமன், தேர்தல்கள் தனி வட்டாட்சியர் அருளானந்தம் உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News