மாணவர்களுக்கு அறிவியல் இயக்கம் சார்பாக பயிற்சி

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2024-03-06 02:17 GMT
மாணவர்களுக்கு அறிவியல் இயக்கம் சார்பாக பயிற்சி நடைபெற்றது

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் கோமதி அம்பாள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வானவில் மன்றம் சார்பாக மாணவர்களுக்கு அறிவியல் செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை சங்கரன்கோவில் வட்டார வானவில் மன்ற கருத்தாளர் ராஜேந்திரன் மாணவர்களுக்கு அளித்தார்.

பயிற்சியின் இறுதியில் மாணவர்கள் நேரடியாக தாங்களே சோதனைகளை செய்து காட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News