காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்
திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.;
Update: 2024-01-11 09:31 GMT
இடமாற்றம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் ஆய்வாளராக பணியாற்றிய உதயகுமார், தேனி காவல் ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.தொடர்ந்து பழனி நகர புதிய காவல் ஆய்வாளராக மணிமாறன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.அதேபோல் கீரனூர் காவல் ஆய்வாளராக சிவக்குமார், சத்திரப்பட்டி காவல் ஆய்வாளராக ரமேஷ் குமார் மற்றும் மதுவிலக்கு காவல் ஆய்வாளராக லாவண்யா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.