ஓசூரில் அடுத்தடுத்து வெடித்த ட்ரான்ஸ்பார்மர்கள் : 6 நாட்களாக மின்சாரம் ரத்து

ஓசூரில் அடுத்தடுத்து வெடித்த ட்ரான்ஸ்பார்மர்கள் : 6 நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவித்த குடியிருப்பு வாசிகள் 7 நாளில் பொருத்தப்பட்ட டிரான்ஸ்பார்மரால் மின்சாரம் பெற்று நிம்மதி மற்றும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2024-03-19 07:00 GMT

 ட்ரான்ஸ்பார்மர்கள்

அடுத்தடுத்து வெடித்த ட்ரான்ஸ்பார்மர்கள் : 7 நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவித்த குடியிருப்பு வாசிகள் ஓசூரில் குடியிருப்பு பகுதியில் பழுது காரணமாக அடுத்தடுத்து பொருத்தப்பட்ட டிரான்ஸ்பார்மர்கள் வெடித்தன. 6 நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவித்த குடியிருப்பு வாசிகள் 7 நாளில் பொருத்தப்பட்ட டிரான்ஸ்பார்மரால் மின்சாரம் பெற்று நிம்மதி மற்றும் மகிழ்ச்சி அடைந்தனர். ஓசூர் நஞ்சுண்டேஸ்வரர் நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்பில் இருந்த ஒரு டிரான்ஸ்பார்மர் திடீரென பழுதடைந்துள்ளது. இதனால் இந்த டிரான்ஸ்பார்மர் மூலம் மின்சாரம் பெற்று வந்த சுமார் 80க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் கடும் அவதியடைந்தனர். இதனையடுத்து ஓசூர் மின்சார வாரியத்தினர் உடனடியாக ஒரு டிரான்ஸ்பார்மரை அங்கு பொருத்தியுள்ளனர். ஆனால் அந்த ட்ரான்ஸ்பார்மர் ஒரே நாளில் வெடித்துள்ளது. இதனையடுத்து மற்றொரு டிரான்ஸ்பார்மரை கொண்டு வந்து மின் வாரியத்தினர் அங்கு பொருத்தியுள்ளனர். அந்த டிரான்ஸ்பார்மரும் வெடித்துள்ளது. இதனால் செய்வது அறியாத திகைத்த மின்சார வாரியத்தினர் ஒவ்வொரு வீடுகளுக்கு செல்லும் மின் இணைப்பை சோதனை மேற்கொண்டு எதனால் இந்த பிரச்சனை வருகிறது என ஆய்வு மேற்கொண்டனர். 40 KVA 100 KVA திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர்களை அடுத்தடுத்து 6 நாட்களில் அந்த குடியிருப்பு பகுதியில் மின்சார வாரியத்தினர் பொருத்தியுள்ளனர். இந்த 6 டிரான்ஸ்பார்மர்களும் அடுத்தடுத்து வெடித்து உள்ளது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வாழும் பொதுமக்கள் இருளில் மூழ்கி கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். கோடை காலம் என்பதால் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் குழந்தைகள் பெரியவர்கள் தவித்துள்ளனர். மின்சாரம் இல்லாமல் மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் கடும் அவதிகளை சந்தித்துள்ளனர். அங்கு வாழும் பொதுமக்களின் நிலைமை இப்படி இருக்க மின்சார வாரியத்தினரோ டிரான்ஸ்பார்மர்கள் அடுத்தடுத்து வெடித்ததால் குழம்பி போயினர். அங்குள்ள அனைத்து வீடுகளிலும் தனித்தனியாக மின்சாரம் குறித்த சோதனைகளை மேற்கொண்டு ஒவ்வொரு தெருவிலும் உள்ள மின் கம்பங்களை சோதனை மேற்கொண்டு எந்த வீட்டில் மின்சார பிரச்சனை உள்ளது எதனால் டிரான்ஸ்பார்மர்கள் அடுத்தடுத்து வெடிக்கிறது என ஆய்வு மேற்கொண்டனர். இங்குள்ள வீடுகளில் மின் மோட்டார்கள் உள்ளிட்ட உள்ள மின் சாதன பொருட்களுக்கு செல்லும் மின் ஒயர்கள் மின்சாரம் செல்லும்போது மெல்ட் ஆகி விடுவதால் அந்த நேரத்தில் டிரான்ஸ்பார்மர் வெடிப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே இந்த பிரச்சினை குறித்து அறிந்த ஓசூர் மின்சார வாரிய உயர் அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று அவர்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகள் மற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி அனைவரும் இரவு பகல் பார்க்காமல் தூக்கம் இல்லாமல் கடும் சிரமத்திற்கு இடையே பிரச்சனைகளை ஆராய்ந்து இன்று 7 வது நாளாக அப்பகுதியில் புதிய டிரான்ஸ்பார்மரை பொருத்தினர். அதன் பின்னரே அனைத்து வீடுகளுக்கும் சீரான மின்சாரம் கிடைத்தது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் 6 நாட்களுக்கு பின்னர் இன்று 7 வது நாளில் மின்சாரம் கிடைத்ததால் நிம்மதி மற்றும் மகிழ்ச்சி அடைந்தனர். இருந்த போதிலும் அப்பகுதியை சேர்ந்த ஒரு சில பொதுமக்கள், மின்சார வாரிய ஊழியர்களுக்கு புதிய தொழில்நுட்பங்கள் தெரிவதில்லை உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளின் பேரில்தான் தற்போது மின்சாரம் கிடைத்துள்ளது. எனவே மின்சார வாரிய துறையினருக்கு புத்தாக்க பயிற்சி அளிக்க வேண்டும் என கேட்டு கொண்டனர். அங்கு வாழும் மற்றொரு தரப்பு மக்களோ, நீண்ட நாளுக்கு பின் 7 வது நாளில் மின்சாரம் கிடைத்ததால் பெரும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தனர். மின்சார வாரியத்தினர் இரவு பகல் பார்க்காமல், உயிரை பணயம் வைத்து, பலமுறை மின்சார கம்பங்களில் ஏறி இறங்கி ஒவ்வொரு வீடுகளிலும் மின்சார ஒயர்களை சோதனை செய்து எங்கு பிரச்சனை உள்ளது என ஆராய்ந்து அதன் பின்னரே தற்போது புதிய டிரான்ஸ்பார்மரை அமைத்து மின்சாரத்தை கொடுத்துள்ளனர். எனவே மின்சார வாரிய உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை தங்கள் பகுதியில் வேலை செய்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்வதாக கூறினர்.
Tags:    

Similar News