பணம் தர மறுத்ததால் செல்போனை எடுத்து சென்ற திருநங்கைகள்

Update: 2024-01-03 07:31 GMT

விசாரணை 

கோவை:கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் கமலநாதன்(38).கோவையில் தங்கியுள்ள இவர் ஓட்டுனராக ரெட் டாக்ஸி என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று இரவு வ.ஊ.சி மைதானம் அருகே வாகனத்தை நிறுத்திவிட்டு காரின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்தபோது ஸ்கூட்டரில் வந்த திருநங்கைகள் இருவர் கமலநாதனிடம் பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளனர். தன்னிடம் பணம் இல்லை என்று கூறிய நிலையில் வாகனத்தில் இருந்த ஒரு திருநங்கை காரில் வைக்கப்பட்டிருந்த செல்போனை எடுத்து சென்று விட்டனர். இதுகுறித்து கமலநாதன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பந்தய சாலை போலீசார் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட திருநங்கைகள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News