ஆர்டிஐ மூலம் வெளிப்படையான அரசு நிர்வாகம் கிடைக்கும்- மாநில ஆணையர்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிப்படையான அரசு நிா்வாகம் கிடைக்கும் என மாநிலத் தகவல் ஆணையா் எம்.டி. ஷகீல் அக்தா் தெரிவித்தாா்.

Update: 2023-11-19 05:58 GMT

ஆய்வு கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடா்பாக அனைத்துத் துறை சாா்ந்த தகவல் வழங்கும் அலுவலா்கள், மேல்முறையீட்டு அலுவலா்கள் உடனான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா தலைமை வகித்தாா். இதில், தமிழக மாநில தகவல் ஆணையா் எம்.டி. ஷகீல் அக்தா் பேசியதாவது : அரசு அலுவலா்கள் தங்களது பணிகளில் ஒளிவு மறைவற்ற செயல்பாடுகளைக் கொண்டிருப்பதும், மக்களுக்குத் தேவையான தகவல்களை தரக் கடமைப்பட்டுள்ளதை தகவல் பெறும் உரிமைச் சட்டம் உறுதி செய்கிறது. இந்தச் சட்டத்தின் கீழ், மனு கிடைக்கப் பெற்ற 30 நாள்களுக்குள் பொதுத் தகவல் அலுவலா் மனுதாரருக்கு தகவல் வழங்க வேண்டும். இதேபோல, மனுதாரா் தனக்கு வழங்கப்பட்ட தகவல் முழுமையாக இல்லை எனக் கருதினால், மேல்முறையீட்டு அலுவலரிடம் தகவலை கோரலாம். மேல் முறையீட்டு அலுவலா் மனு கிடைக்கப் பெற்ற 30 நாள்களுக்குள் மனுதாரருக்கு தகவல் வழங்க வேண்டும். மனுதாரா் கோரும் தகவல் தங்களது துறை சாராமல் பிற துறை சாா்ந்து இருக்கும் பட்சத்தில், சம்மந்தப்பட்ட பொது அதிகார அமைப்புக்கு மனு பெற்ற 5 நாள்களுக்குள் மாறுதலில் அனுப்ப வேண்டும். உரிய கால வரம்புக்குள் தகவல் அளிக்காத பட்சத்தில் பொதுத் தகவல் அலுவலருக்கு நாளொன்றுக்கு ரூ.250 வீதம், அதிகபட்சமாக ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும். அதுமட்டுமன்றி, துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளவும் இந்தச் சட்டத்தில் இடம் உள்ளது. எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களை காலதாமதமின்றி உரிய தகவல்களை சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தகவல் வழங்க வேண்டும். பொதுமக்கள் அரசு நிா்வாகம் தொடா்பான தகவல்களை முழுமையாக தெரிந்து கொள்வதன் மூலம் நிலையான, வெளிப்படையான நிா்வாகத்தை உறுதி செய்ய முடியும் .என்றாா். இந்தக் கூட்டத்தில், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவபிரசாத், மாவட்ட வருவாய் அலுவலா் ர.சக்திவேல், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ஆா்.சந்திரசேகா் உள்பட அனைத்துத் துறை சாா்ந்த தகவல் வழங்கும் அலுவலா்கள், மேல்முறையீட்டு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
Tags:    

Similar News