கொடிநாள் நன்கொடை இலக்கு எட்டிய போக்குவரத்து கழக அதிகாரிக்கு பாராட்டு
சேலத்தில் கொடிநாள் நன்கொடை இலக்கு எட்டிய போக்குவரத்து கழக அதிகாரிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2023-12-19 05:21 GMT
2021ம் ஆண்டிற்கான சேலம் மாவட்ட கொடிநாள் நன்கொடை வசூல் தொகை இலக்காக ரூ.4 லட்சம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலத்திற்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நிர்வாக இயக்குனர் பொன்முடி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு இலக்கை அடைய செய்தார். அத்துடன் அதற்கான காசோலை சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள முன்னாள் படைவீரர் அலுவலகத்தில் துணை இயக்குனரிடம் வழங்கப்பட்டது. இந்த இலக்கை அடைந்தமைக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடியை பாராட்டி வெள்ளி பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவற்றை சேலம் கலெக்டர் சார்பில் முன்னாள் படைவீரர் துணை இயக்குனரால் வழங்கப்பட்டது.