போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் - ஆதரவு கோரி பிரசாரம்

போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு கோரி, தஞ்சாவூரில் பயணிகள், பொதுமக்களிடம் அனைத்து தொழிற்சங்கத்தினர் பிரசாரம் செய்தனர்.

Update: 2024-01-02 05:18 GMT
போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் 15 ஆவது ஊதிய ஒப்பந்தம், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியர் நல கூட்டமைப்பு சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்வது தொடர்பாக அரசுக்கும் போக்குவரத்துக்கழக நிர்வாகங்களுக்கும் டிசம்பர் 19 ஆம் தேதி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதன் அடிப்படையில் அனைத்து சங்கங்களையும் தொழிலாளர் ஆணையர் டிசம்பர் 27 ஆம் தேதி அழைத்துப் பேசியதில் தீர்வு காணப்படவில்லை. இதைத் தொடர்ந்து, கூட்டமைப்பு சார்பில் பயணிகள் மற்றும் பொது மக்களைச் சந்தித்து போக்குவரத்து கழகத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு கோரி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையம் உள்பட 4 இடங்களில் பிரசார இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த இயக்கத்துக்கு சிஐடியு மத்திய சங்கத் தலைவர் காரல் மார்க்ஸ், ஏஐடியுசி மத்திய சங்க பொதுச் செயலர் எஸ். தாமரைச் செல்வன், ஐஎன்டியுசி பொதுச் செயலர் க. சரவணன், ரிவா சங்கத் தலைவர் என். பாஸ்கர் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏஐடியூசி மாநிலத் துணைத் தலைவர் துரை. மதிவாணன், அதிகாரிகள் நல சங்க நிர்வாகி ஜெ.சந்திரமோகன், பொறியாளர் சங்க நிர்வா கிகள் எஸ். ரவீந்திரன், சிஐடியு நிர்வாகி எஸ்.ராமசாமி. ஐஎன்டியூசி நிர்வாகி கென்னடி, ரிவா சங்க நிர்வாகி கண்ணன், ஓய்வு பெற்றோர் நலச் சங்க நிர்வாகி ஏ.கணேசன், ஏஐடியுசி ஓய்வு பெற்றோர் சங்கத் துணைத் தலைவர் டி.தங்கராசு, கண்காணிப்பாளர் சங்க நிர்வாகி எஸ்.பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News