போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் பொதுமக்கள் அவதி ‍

உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

Update: 2024-02-01 04:46 GMT
பைல் படம்

உளுந்தூர்பேட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் டிரைவர், கண்டக்டர்களை கூடுதல் கிலோமீட்டர் பஸ்களை இயக்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த டிரைவர், கண்டக்டர்கள் நேற்று அதிகாலை அரசு போக்குவரத்து பணிமனையில் 40க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டனர். அதிகாரிகளின் இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள கிலோமீட்டர் தொலைவை பஸ்களை இயக்க வேண்டும் எனக்கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் பஸ்களை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கிராமப் புறங்களுக்கு பஸ்சுகள் செல்லாமல் காலதாமதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் தலைமையில் வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதுகாப்பணியில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்த தொ.மு.ச., நிர்வாகிகள் டிரைவர், கண்டக்டர்களை பஸ்களை இயக்குமாறு கூறியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர் போக்குவரத்து ஊழியர்கள் சமரசம் செய்ததை தொடர்ந்து நேற்று காலை 6.50 மணி அளவில் ஒவ்வொரு ஊழியராக பஸ்களை இயக்கத் தொடங்கினர். போராட்டம் காரணமாக பயணிகள் அவதியடைந்தனர்.

Tags:    

Similar News